முஸ்லிம்கள் வன்முறை வழியை நாடியதில்லை: சுமந்திரன் - sonakar.com

Post Top Ad

Wednesday, 24 April 2019

முஸ்லிம்கள் வன்முறை வழியை நாடியதில்லை: சுமந்திரன்


இந்நாட்டில் முஸ்லிம்கள் மீது வன்முறை திணிக்கப்பட்ட போதிலும் ஒருபோதும் முஸ்லிம்கள் வன்முறை வழியை நாடியதில்லையென தெரிவித்துள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன்.


ஞாயிறு தினம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கருத்து வெளியிடுவோர், குறிப்பாக அரசியல்வாதிகள் எந்த ஒரு சமூகத்தையும் குற்றஞ்சாட்ட வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐ.எஸ். அமைப்பினால் ஈர்க்கப்பட்ட தீவிரவாதிகள் குழுவினால் கடந்த ஞாயிறு நடாத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களினால் 329 பேர் உயிரிழந்துள்ளமை (இதுவரை) உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 500 பேர் வரை காயமுற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment