முஸ்லிம்கள் மீதான கெடுபிடிகள்: பிரதமருடன் விசேட சந்திப்பு! - sonakar.com

Post Top Ad

Tuesday 30 April 2019

முஸ்லிம்கள் மீதான கெடுபிடிகள்: பிரதமருடன் விசேட சந்திப்பு!


பாதுகாப்பு சோதனை நடவடிக்கைகளின் பேரில் முஸ்லிம்கள் மீது கெடுபிடிகள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி, இதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி சிவில் அமைப்புகள் இன்று ஆளுனர் அசாத் சாலியை சந்தித்திருந்தனர்.


இப்பின்னணியில் இது பற்றி பிரதமருடன் இன்று மாலை 7 மணியளவில் நேரடியாக கலந்துரையாடிய ஆளுனர், பாதுகாப்பு படையினர் பள்ளிவாசல்களுக்கு சென்றதும் முதல் வேலையாக சிசிடிவி கமராக்களை அணைத்து விட்டு, சப்பாத்துக் கால்களுடன் பள்ளிவாசல்களுக்குள் செல்வதுடன் மோப்ப நாய்களை உள்ளே எடுத்துச் செல்வதையும் பல சந்தர்ப்பங்களில் சோதனை எனும் பேரில் அல்-குர்ஆன் பிரதிகளை தூக்கி வீசும் சம்பவங்களும் இடம்பெற்றிருப்பது குறித்தும் சுட்டிக்காட்டி கவலை வெளியிட்டுள்ளார்.

இவ்விடயத்துக்கு உடனடியாக தீர்வு காண்பதாக உறுதியளித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாளைய தினம் ஆளுனர் தலைமையில் முஸ்லிம் சிவில் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதோடு ஜனாதிபதியுடனான சந்திப்பு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பள்ளிவாசல்கள் முஸ்லிம்களின் வீடுகள் தொடர்ச்சியாக சோதனையிடப்பட்டு வரும் அதேவேளை முஸ்லிம் சமூகம் கெடுபிடிகளுக்கு முகங்கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர விட டுடியாது என தெரிவித்த மேல் மாகாண ஆளுனர் ஜனாதிபதி, பிரதமரின் நேரடி தலையீட்டை இதில் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment