தீவிரவாதிகள் சரணடைய 48 மணி நேர காலக்கெடு கொடுக்க முஸ்தீபு - sonakar.com

Post Top Ad

Tuesday, 30 April 2019

தீவிரவாதிகள் சரணடைய 48 மணி நேர காலக்கெடு கொடுக்க முஸ்தீபு


ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை நடாத்திய கும்பலின் முக்கிய நபர்கள் ஒன்றில் இறந்து அல்லது கைதாகியுள்ள போதிலும் நாட்டில் மேலும் சோதனை நடவடிக்கைகள் தொடர்கின்றன.இந்நிலையில், தொடர்ந்தும் ஒளிந்திருக்கும் தீவிரவாதிகள் இருப்பின் அவர்கள் சரணடைவதற்கு 48 மணி நேர காலக்கெடு வழங்குவதற்கான பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

சஹ்ரானின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தெமட்டகொட இப்ராஹிமின் புதல்வர்கள் தாக்குதலில் உயிரிழந்துள்ள அதேவேளை ஏனைய புதல்வர்கள் மற்றும் மாவனல்லை இப்ராஹிம் மௌலவியின் புதல்வர்கள் ஏலவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேலும் தீவிரவாதிகள் இருப்பின் சரணடையக் கோரும் அறிவித்தலை விடுப்பது குறித்து அரச உயர் மட்டத்தில் ஆலோசிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment