கொழும்பில் அவசர சோதனை நடவடிக்கைகள்! - sonakar.com

Post Top Ad

Thursday, 25 April 2019

கொழும்பில் அவசர சோதனை நடவடிக்கைகள்!


கொழும்பு நகரில் அவசர திடீர் சோதனைகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பொது மக்களை ஒத்துழைப்பு வழங்குமாறும் வீதிப்போக்குவரத்து சுமுகமாக இடம்பெறுவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.


இதேவேளை, அலுவலகங்களில் கடமையாற்றுபவர்கள் வெளியில் செல்வதைத் தவிர்த்துக்கொள்ளும்படியான அறிவுறுத்தல்களும் பல நிறுவனங்களுக்குள் பரிமாறப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், வீதிப் போக்குவரத்து தடை எதுவும் இல்லையென பொலிசார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஞாயிறு தினம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களையடுத்து முடுக்கிவிடப்பட்டுள்ள சோதனை நடவடிக்கைகள் ஊடாக பலர் கைது செய்யப்பட்டும் தடுத்து வைக்கப்பட்டும் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment