நாடாளுமன்ற வரைபடம் - 13 சிம்கார்டுகளுடன் பலங்கொடயில் ஒருவர் கைது - sonakar.com

Post Top Ad

Thursday 25 April 2019

நாடாளுமன்ற வரைபடம் - 13 சிம்கார்டுகளுடன் பலங்கொடயில் ஒருவர் கைது


நாடாளுமன்றின் வரைபடம், உள்நுழைவதற்கான அனுமதிப்பத்திர மாதிரி , 13 சிம்கார்டுகள், 3 கைத்தொலைபேசிகள், 02 துப்பாக்கி ரவைகள் உட்பட்ட பொருட்களுடன் பலங்கொடயில் 26 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.



கொல்லுபிட்டியில் உணவகம் ஒன்றில் பணியாற்றி வருவதாகக் கருதப்படும் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை அங்கிருந்து அம்பாறை வேன் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாகவும் குறித்த நபர் அம்பாறையைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தமக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றின் பின்னணியிலேயே திடீர் சுற்றிவளைப்பு இடம்பெற்றதாக பொலிசார் தெரிவிக்கின்ற அதேவேளை நாடளாவிய ரீதியில் இராணுவ சோதனைகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment