புறக்கோட்டை: ஜூம்ஆ தொழுகையை விரைவாக நடாத்தி முடிக்க ஏற்பாடு - sonakar.com

Post Top Ad

Thursday 25 April 2019

புறக்கோட்டை: ஜூம்ஆ தொழுகையை விரைவாக நடாத்தி முடிக்க ஏற்பாடு


புறக்கோட்டை பள்ளிவாசல்களின் சம்மேளனத்தினால் ஒருசில பள்ளிவாசல்களில் ஜூம்ஆத் தொழுகையை விரைவாக நடாத்தி முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாளை வெள்ளிக் கிழமையாக இருப்பதால் அது முஸ்லிம்களுக்கு முக்கிய நாளாக இருக்கின்றது. வெள்ளிக் கிழமைகளில் விஷேட பிரசங்கமும், இரண்டு ரஅக்காத்துடைய ஜூம்ஆத் தொழுகைiயும் வழமையாக இடம் பெறும் எனினும் தற்போதைய அச்ச நிலைமைகளையும் பாதுகாப்பு நிலைமைகளையும் கருத்திற் கொண்டு பாதுகாப்பு இல்லாத இடங்களில் உள்ள பள்ளிவாசல்களில் ஜூம்ஆத் தொழுகையை தொழாது அதனை ஏனைய நாற்களில் தொழுவதுபோல் லுஹர் தொழுகையாக தொழலாம் என்றும் பள்ளிக்குச் செல்லாதவர்கள் வீடுகளில் லுஹர் தொழுகையை தொழலாம் என்றும் தேவையேற்படின் பாதுகாப்புடன் ஜூம்ஆத் தொழுகையை விரைவாகவும், பிரசங்கத்தை சுருக்கியும் ஜூம்ஆத் தொழுகையை மேற்கொள்ளலாம் எனவும் உலமாக்கள்; முஸ்லிம்களுக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளனர். 


தேவை ஏற்படின் தகுந்த பாதுகாப்புடன் ஜூம்ஆ பிரசங்கத்தை சுருக்கியும், தொழுகையை விரைவாகவும் நடாத்திக் கொள்ளலாம் என அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபை வழங்கிய ஆலோசனையின் பிரகாரம் கொழும்பு பெற்றா பள்ளிவாசல்கள் சம்மேளனமும், வாழைத் தோட்டம் மஸ்ஜிதுன் நஜ்மி ஜூம்ஆப் பள்ளிவாசல் நிருவாகமும் ஒருசில பள்ளிவாசல்களில் ஜூம்ஆத் தொழுகையை நடாத்துவதற்கு தீர்மாணித்துள்ளதாகவும். இதற்காக குறித்த பகுதியில் உள்ள பொலிஸாரின் பாதுகாப்பைப் பெற்று பள்ளிவாசல் நிருவாகத்திற்குட்பட்ட இளைஞர் அணிகளையும் ஒன்றினைத்து பாதுகாப்பு வழங்குவது எனத் தீர்மாணித்துள்ளதாக வாழைத்தோட்டம் மஸ்ஜிதுன் நஜ்மி ஜூம்ஆப் பள்ளிவாசலின் தலைவர் இஸ்மத் ஹாஜி தெரிவித்தார்.

இதேவேளை பாதுகாப்புக் கருதி கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிருவாகம் நாளை ஜூம்ஆத் தொழுகையை மேற்கொள்வதில்லை என்றும் அதற்குப் பதிலாக லுஹர் தொழுகையை தொழுமாறும் ஜமாத்தினருக்கு அறிவித்தல்கள் விடுத்துள்ளதாகவும் பெரிய பள்ளிவாசலின் பிரதம இமாம் மௌலவி தஸ்லீம் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பதட்ட நிலைமைகளைத் தொடர்ந்து மக்கள் அதிகமாக ஒன்று கூடுவது, நிகழ்வுகளை நடாத்துவதில் பாதுகாப்பு அச்சங்கள் இருப்பதால் அவற்றைத் முடியுமானவரையில் தவிர்த்துக் கொள்ளுமாறு அரசாங்கமும், சமயத் தலைவர்களும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

-ஏ.எஸ்.எம்.ஜாவித்

No comments:

Post a Comment