
இந்திய பாதுகாப்பு செயலாளர் சஞ்சய் மித்ரா, இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் பின்னணியில் இன்று மாலை இலங்கை வந்துள்ளார்.
இவ்விஜயத்தின் போது, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இலங்கை பாதுகாப்பு செயலாளர், முப்படை முக்கியஸ்தர்களுடனும் சஞ்சய் மித்ரா சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சீன ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவித்து வரும் இந்தியா, ராஜதந்திர உறவுகளை பலப்படுத்தி, அபிவிருத்தி திட்டங்களிலும் அதிகம் பங்கெடுக்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment