
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வரட்சி நிலை காரணமாக மக்கள் குடிநீர் இன்றியும், மின்சார வசதியின்றியும் பல்வேறு அசௌகரியங்களை எதிர் கொள்கின்றதை முன்னிட்டு நாட்டில் வரட்சி நீங்கவும், மழை வேண்டியும் விசேட தொழுகையை கொழம்பு 12, வாழைத்தோட்டம் அல்-மஸ்ஜிதுன் நஜ்மி ஜூம்ஆப் பள்ளிவாசலும், இப்பள்ளியின் பைதுல்மால் நிதி பெறும் பள்ளிவாசல்களின் சங்கமும் ஒன்றிணைந்து மழைவேண்டிய இஸ்திஸ்ஹாயி தொழுகையை அல்-ஹிக்மா கல்லூரி மைதானத்தில் இன்று ஏற்பாடு செய்திருந்தன.
பள்ளிவாசலின் தலைவர் இஸ்மத் ஹாஜி தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வின் விஷேட குத்பா உரையையும், துஆப் பிரார்த்தனையையும் மௌலவி எம்.ஜே.எம்.அஸ்ஹர் பக்காவி நிகழ்த்தினார். மழைவேண்டிய தொழுகையை வாழைத்தோட்ட ஜூம்ஆப் பள்ளியவாசலின் பிரதம இமாம் மௌலவி ரமீஸ் (பஹ்ஜி) நடாத்தினார்.
இதன்போது மத்ரஸா மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
-ஏ.எஸ்.எம்.ஜாவித்
No comments:
Post a Comment