முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் விசாரணையென பிரச்சாரம்: அசாத் மறுப்பு! - sonakar.com

Post Top Ad

Monday, 22 April 2019

முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் விசாரணையென பிரச்சாரம்: அசாத் மறுப்பு!


முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணை நடாத்தியதாக சில இணையத்தளங்கள் மேற்கொண்டு வரும் பிரச்சாரத்தை மறுதலித்துள்ளார் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி.இது தொடர்பில் சோனகர்.கொம் ஆசிரியபீடம் அவரைத் தொடர்புகொண்ட போது மறுதலித்த அவர், விமல் வீரவன்ச தரப்பினர் இது போன்ற தகவல்களை பரப்ப முனைவதாகவும், திருட்டு ஆவணங்களைக் கொண்டு வாழும் வீரவன்ச போன்றவர்களுக்குத் தான் எதற்கெடுத்தாலும் அச்சம் இருப்பதாகவும் விளக்கமளித்தார்.

இதேவேளை, மேலும் ஒரு முஸ்லிம் அமைச்சர் தெமட்டகொடயில் கைதான நபர்களோடு நெருங்கிய தொடர்பினைப் பேணி வந்ததன் பின்னணியில் அவரும் விசாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், காலையில் ஐக்கிய தேசியக் கட்சி செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், தனக்கும் குறித்த நபர்களுக்கும் தொடர்பில்லையென மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment