இலங்கைக்கு உதவக் காத்திருக்கிறோம்: மோடி! - sonakar.com

Post Top Ad

Sunday, 21 April 2019

இலங்கைக்கு உதவக் காத்திருக்கிறோம்: மோடி!


இன்று காலை கொழும்பில் குண்டு வெடிப்பு இடம்பெற்ற சில கணப்பொழுதுகளிலேயே தாக்குதல்தாரிகள் முஸ்லிம்கள் எனவும் குறித்தவொரு கொள்கை இயக்கத்தை சேர்ந்தவர்கள் எனவும் இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்த நிலையில் பிராந்தியத்தில் இவ்வாறான சக்திகளை உருவாக விடப்போவதில்லையென சூளுரைத்திருந்தார் நரேந்திர மோடி.இந்நிலையில், இலங்கைக்கு எவ்வித உதவியையும் வழங்கத் தாம் தயாராக இருப்பதாக தற்போது ஜனாதிபதி அலுவலகத்துக்குத் தகவல் அவர் தகவல் அனுப்பி வைத்துள்ளார்.

நீண்டகாலமாக, இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் வளர்க்கப்படுவதாகவும் அதற்கு பாகிஸ்தான் தூதரகம் அனுசரணை வழங்குவதாகவும் குற்றஞ்சாட்டி வரும் இந்தியா, இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் அண்மைக்காலமாக தீவிரமாக தலையிட்டு வருவதுடன் ரணில், மைத்ரி மஹிந்த என முக்கிய தலைவர்களுடன் தொடர் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், இன்றைய திட்டமிட்ட தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளமையும் இந்தியாவின் நடவடிக்கைகள் பாரிய சந்தேகத்தை உருவாக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment