பாணந்துறையில் தங்கியிருந்த தாக்குதல்தாரிகள்: வேன் சாரதி கைது! - sonakar.com

Post Top Ad

Sunday, 21 April 2019

பாணந்துறையில் தங்கியிருந்த தாக்குதல்தாரிகள்: வேன் சாரதி கைது!


கொழும்பில் இன்று தாக்கதல்களை மேற்கொண்ட குழுவினர் பயணித்ததாகக் கருதப்படும் வேன் ஒன்றை வெள்ளவைத்தையில் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கின்ற பொலிசானர் வேன் சாரதியையும் கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.



குறித்த நபர்கள் பாணந்துறையில் ஒரு வீட்டில் தங்கியிருந்ததாக தகவல் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் ஒரு குழுவாக இவ்வாறு பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவங்களின் பின்னணியில் பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள போதிலும் அவர்களது பெயர் விபரங்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு பாதுகாப்பு அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளமையும் அது இனரீதியான வன்முறைகள் உருவாக வழி வகுக்கும் என அச்சம் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment