நள்ளிரவு முதல் அவசர கால சட்டம்! - sonakar.com

Post Top Ad

Monday, 22 April 2019

நள்ளிரவு முதல் அவசர கால சட்டம்!


தனது நிறைவேற்று அதிகார வரையறைகளுக்குட்பட்டு நேற்றைய பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் எதிர்வரும் 30 நாட்களுக்கு அவசர கால சட்டத்தை அமுலுக்குக் கொண்டுவரவுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.


திங்கள் நள்ளிரவு முதல் அவசர கால சட்டம் அமுலுக்கு வரும் வகையில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட தேவை நிமித்தம் வெளிநாடு சென்றிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாடு திரும்பியுள்ள நிலையில் பாதுகாப்பு கவுன்சிலைக் கூட்டி ஆராய்ந்து இம்முடிவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment