தாக்குதல் நடாத்திய பயங்கரவாதிகள் உள்நாட்டவரே: ராஜித - sonakar.com

Post Top Ad

Monday, 22 April 2019

தாக்குதல் நடாத்திய பயங்கரவாதிகள் உள்நாட்டவரே: ராஜித


நேற்றைய தினம் தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் அனைவரும் உள்நாட்டவரே என தெரிவிக்கிறார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.


கிழக்கிலங்கை, காத்தான்குடியைத் தளமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பை ஸ்தாபித்த நபர் உட்பட சகாக்களே இத்தாக்குதலை நடாத்தியுள்ளதாக கருதப்படுகின்ற அதேவேளை வெளிநாட்டு அமைப்புகளின் தொடர்பின்றி இவ்வாறான ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதலை நடாத்தியிருக்க முடியாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், வெளிநாட்டுத் தொடர்புகளை தொடர்ந்தும் ஆராய்ந்து வருகின்ற போதிலும் பயங்கரவாதத்தை அரங்கேற்றிய அனைவரும் உள்நாட்டவர்களே என ராஜித தெரிவிக்கின்றமையும் புத்தளம், வனாத்தவில்லு பகுதியில் கைதாகி விடுதலையான நபரும் இதில் உள்ளடக்கம் என அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment