மேன்முறையீடு நிராகரிப்பு: வெலே சுதாவுக்கு மரண தண்டனை - sonakar.com

Post Top Ad

Friday, 5 April 2019

மேன்முறையீடு நிராகரிப்பு: வெலே சுதாவுக்கு மரண தண்டனை


2015ம் ஆண்டு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து வெலே சுதாவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.


இலங்கையின் போதைப பொருள் வர்த்தகத்தில் 60 வீதத்தினை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாகக் கருதப்படும் வெலே சுதா 2008ம் ஆண்டு 7.5 கிராம் ஹெரோயின் வைத்திருந்ததன் பின்னணியில் 2015ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

சுதாவின் கைதோடு இலங்கையில் போதைப் பொருள் வர்த்தகம் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும் என தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் சுதாவை விட பல மடங்கு போதைப் பொருள் வர்த்தகம் மற்றும், கொலை, கொள்ளைகளை நடாத்திய மாகந்துரே மதுஷ் வெளியாகியிருந்தமையும் தற்போது டுபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment