காலவரையறையற்ற ஊரடங்கு : விமான நிலையம் செல்வோருக்கு அனுமதி! - sonakar.com

Post Top Ad

Sunday, 21 April 2019

காலவரையறையற்ற ஊரடங்கு : விமான நிலையம் செல்வோருக்கு அனுமதி!நாட்டில் தற்போது நிலவி வரும் சூழ்நிலையின் பின்னணியில் பொலிசாரால் காலவரையறையற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இன்றைய தினம் விமானப் பயணங்கள் நிமித்தம் விமான நிலையம் செல்வோர் அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து பயணிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.


இன்றைய தாக்குதல் சம்பவங்களில் 140 பேர் வரை உயிரிழந்துள்ளதாக இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை 400க்கு அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சோதனை நடவடிக்கைகள் தொடரும் சூழ்நிலையில் ஊரடங்கு காலவரையற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் விமான பயணம் நிமித்தம் பயணிப்போருக்கு விதிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக தெமட்டகொடயிலயில் இடம்பெற்ற சம்பவத்தில் மூன்று பொலிசார் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment