தெஹிவளை-தெமட்டகொட: தப்பியோடியவர்களின் செயல்: ஹர்ஷ - sonakar.com

Post Top Ad

Sunday, 21 April 2019

தெஹிவளை-தெமட்டகொட: தப்பியோடியவர்களின் செயல்: ஹர்ஷ


இன்றைய குண்டுத்தாக்குதல்களின் சூத்திரதாரிகளை அடையாளம் கண்டுவிட்டதாக பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியோட முனைந்து கொண்டிருப்பவர்களின் செயலே இறுதியாக இடம்பெற்ற தெஹிவளை மற்றும் தெமட்டகொட சம்பவங்கள் என தெரிவிக்கிறார் அமைச்சர் ஹர்ஷ டிசில்வா.


பாதுகாப்பு படையினர் பல முனையில் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில் கொழும்பில் தெஹிவளை மற்றும் தெமட்டகொடயிலும் இரு குண்டுவெடிப்புகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் தெமட்டகொட சம்பவத்தில் மூன்று பொலிசார் உயிரிழந்துள்ளதுடன் அது தற்கொலைத் தாக்குதல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பின்னணியில், தற்சமயம் தப்பியோடிக் கொண்டிருப்பவர்களே இறுதியாக இடம்பெற்ற இரு தாக்குதல்களையும் நடாத்தியிருப்பதாக ஹர்ஷ தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment