இலங்கை நிலவரம்: பாப்பரசர் - இம்ரான் கான் கண்டனம்! - sonakar.com

Post Top Ad

Sunday, 21 April 2019

இலங்கை நிலவரம்: பாப்பரசர் - இம்ரான் கான் கண்டனம்!


2009 யுத்த நிறைவின் பின்னர் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களால் இலங்கை மக்கள் அதிர்ச்சியுற்றுள்ள நிலையில் மிலேச்சத்தனமான தாக்குதல்களை பாப்பரசர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டித்துள்ளனர்.


சம்பவம் இடம்பெற்றதும் கையுமாக மிக விரைவாக முஸ்லிம் விரோத செய்திகளை பரப்புவதில் இந்திய ஊடகங்கள் தீவிரமாக செயற்பட்டு வருவதுடன் பிராந்தியத்தில் இவ்வாறான சம்பவங்களை இந்தியா அனுமதிக்காது என  மோடி தெரிவித்ததாகவும் பிரச்சாரம் செய்கின்றன.

சீன ஆதிக்கத்திற்குள் இலங்கை இயங்குவது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என தொடர் பிரச்சாரங்கள் செய்யப்படும் சூழ்நிலையில் இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் இலங்கை விவகாரத்துக்கு அங்கு முக்கியத்துவமளிக்கப்பட்டுள்ளதுடன் இன வெறுப்புணர்வும் தூண்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment