சமூக வலைத்தளங்களில் தூண்டிவிடப்படும் இனவாதம்; மக்கள் அவதானம்! - sonakar.com

Post Top Ad

Sunday, 21 April 2019

சமூக வலைத்தளங்களில் தூண்டிவிடப்படும் இனவாதம்; மக்கள் அவதானம்!


இன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளைப் பின்னணியாகக் கொண்டு விசமிகள் இனவாதத்தைத் தூண்டும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதை சமூக வலைத்தளங்களில் அவதானிக்க முடிகிறது.



குறிப்பாக, இன்றைய குண்டு வெடிப்பு சம்பவத்தை முஸ்லிம்களோடு தொடர்பு படுத்தி வெறுப்புணர்வைத் தூண்டும் முயற்சிகள் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில், அவற்றிற்கு பதிலளித்து, எதிர்வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடுவதை விட பொலிசாரின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை மௌனம் காப்பது நன்மை பயக்கும்.

இன்றைய வெடிப்பு சம்பவங்களுக்கு முன்னோடியாக அண்மையில் மெடிஸ்த தேவாலயங்கள் இலக்கு வைக்கப்பட்டு வந்திருந்ததுடன் அதனை எதிர்த்து இரு தினங்களுக்கு முன்பாக கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெற்றிருந்தது. எனவே, பொலிசார் உண்மை கண்டறிந்து தகவல் வெளியிடும் வரை சமூக வலைத்தள இனவாத வலையில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையை வலுவாக வைத்திருக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment