குண்டு வெடிப்புகளில் இதுவரை 40க்கும் அதிகமானோர் பலி! - sonakar.com

Post Top Ad

Sunday, 21 April 2019

குண்டு வெடிப்புகளில் இதுவரை 40க்கும் அதிகமானோர் பலி!


இன்று காலை 8.45 - 9 மணிக்கிடையில் இலங்கையின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்கள், மட்டக்களப்பில் ஒரு தேவாலயம் உட்பட ஆறு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் பின்னணியில் இதுவரை 40க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.



250க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ள நிலையில் குறித்த தாக்குதல்கள் நன்கு திட்டமிடப்பட்டு, ஒழுங்குபடுத்தப்பட்டு நடாத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்கள் மற்றும் சாட்சியங்களை தேடிவரும் அதேவேளை இரு நகரங்களிலும் பதற்றம் நிலவுவதுடன் மக்கள் அதிர்ச்சியை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment