சமூக வலைத்தளங்கள் மீதான தடையை நீக்க உத்தரவு - sonakar.com

Post Top Ad

Tuesday, 30 April 2019

சமூக வலைத்தளங்கள் மீதான தடையை நீக்க உத்தரவுகடந்த 21ம் திகதி பயங்கரவாத தாக்குதல்களையடுத்து பேஸ்புக், வட்ஸ்அப், வைபர், யுடியுப் போன்ற தளங்களை நேரடியாக பார்ப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.குறித்த தடை அமுலில் இருந்த போது, வி.பி.என் தொழிநுட்பம் ஊடாக இத்தளங்கள் இலங்கையிலிருந்து பார்வையிடப்பட்ட போதிலும் கணிசமான அளவு தகவல் பரிமாற்றம் வரையறுக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நிலையில், பொதுமக்கள் 'பொறுப்புடன்' தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு தடை நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment