அமெரிக்க நிபுணரின் ஹோட்டல் அறையை மோப்பம் பிடித்த இராணுவ மோப்ப நாய் - sonakar.com

Post Top Ad

Monday, 29 April 2019

அமெரிக்க நிபுணரின் ஹோட்டல் அறையை மோப்பம் பிடித்த இராணுவ மோப்ப நாய்


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களையடுத்து நட்சத்திர ஹோட்டல்கள் தீவிர பரிசோதனைக்குப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அங்கு தங்கியிருந்த அமெரிக்க வெடிபொருள் நிபுணர் ஒருவரின் அறையை இராணுவத்தின் கே9 விசேட பிரிவின் மோப்பநாயான  'பிராங்க்' மோப்பம் பிடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.குண்டுவெடிப்பு விசாரணைகளுக்கு உதவவே அமெரிக்க நிபுணர் வந்திருந்த அதேவேளை அவரது அறையில் இருந்த இயந்திரம் ஒன்றில் சிறிதளவு வெடிபொருள் காணப்பட்டுள்ளதாகவும் அதை மோப்பம் பிடித்தே பிராங்க் குறித்த அறையை அடையாளம் காட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வேளையில், அமெரிக்க நிபுணர் வெளியில் சென்றிருந்ததால் அமெரிக்க தூதரகத்தைத் தொடர்பு கொண்டு குறித்த நபரை வரவழைத்து பரிசோதனைகளை மேற்கொண்டதாகவும் அதன் போதே இவ்வாறு சிறிதளவு வெடிபொருள் ஒட்டிக்கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment