மாதம்பையில் கைதான எகிப்திய நபருக்கு விளக்கமறியல்! - sonakar.com

Post Top Ad

Thursday, 25 April 2019

மாதம்பையில் கைதான எகிப்திய நபருக்கு விளக்கமறியல்!


மாதம்பையில் இயங்கும் அரபுக் கல்லூரியொன்றில் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த எகிப்திய பிரஜையொருவர் நேற்றைய தினம் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.விசா இன்றி நாட்டில் தங்கியிருந்ததாக கூறப்பட்டதை நிராகரித்திருந்த கல்லூரி நிர்வாகம் அவருடைய விசாவும் கடவுச்சீட்டும் இன்று (25) கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் வருடாந்த ஒப்பந்த அடிப்படையிலேயே குறித்த நபர் இங்கு பணியாற்றியதாகவும் விளக்கமளித்துள்ளனர்.

இந்நிலையில் நாளை வரை குறித்த நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். இலங்கையில் வெளிநாட்டு ஆதரவு நிலைப்பாடுள்ள கொள்கை இயக்கங்கள் இவ்வாறு வெளிநாட்டு ஆசிரியர்களை தருவிக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment