பெண்களைக் கொண்டு விகாரையைத் தாக்கத் திட்டமிருந்ததாக சந்தேகம்! - sonakar.com

Post Top Ad

Sunday, 28 April 2019

பெண்களைக் கொண்டு விகாரையைத் தாக்கத் திட்டமிருந்ததாக சந்தேகம்!


தேசிய தவ்ஹீத் ஜமாத் எனும் பயங்கரவாத அமைப்பு பெண்களை உபயோகித்து பௌத்த விகாரைகளைத் தாக்கவும் திட்டம் தீட்டியிருக்கலாம் என பொலிஸ் தரப்பு சந்தேகிக்கிறது.



சாய்ந்தமருதில் பயங்கரவாதிகள் தங்கியிருந்த வீட்டிலிருந்து சிங்கள பெண்கள் அணியும் வகையில் பெண்களுக்குரிய ஆடைகள் தொகை கைப்பற்றப்பட்டதன் பின்னணியிலேயே இவ்வாறு சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து மேலதிக தகவல் வெளியிட்டுள்ள பொலிசார், கிரியுல்ல பகுதியில் முஸ்லிம் பெண்ணொருவரால் 29,000 ரூபா பெறுமதியான சிங்கள பெண்கள் அணியும் வகையிலான வெள்ளை நிற ஆடைகள் கொள்வனவு செய்யப்பட்டது தொடர்பிலும் தகவல் கிடைத்துள்ளதாகவும் சாய்ந்தமருது வீட்டில் கண்டெடுத்தவை போக மிகுதி ஆடைகள் பற்றி புலனாய்வு விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை கைதான மாவனல்லை சந்தேக நபர்களுள் ஒருவர் தனது மனைவிக்கு மாத்தறை பகுதியிலுள்ள சிங்கள பெண்ணொருவரின் பெயரில் தயாரிக்கப்பட்ட தேசிய அடையாள அட்டையொன்றை வழங்கிச் சென்றிருந்ததாகவும் முன்னர் தகவல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment