இலங்கையின் வான் பரப்புக்கான கட்டணத்தை அதிகரிக்க முஸ்தீபு - sonakar.com

Post Top Ad

Sunday, 14 April 2019

இலங்கையின் வான் பரப்புக்கான கட்டணத்தை அதிகரிக்க முஸ்தீபு


கடந்த 30 வருடங்களாக மாற்றமின்றிக் காணப்படும் இலங்கையின் வான்பரப்பு, விமான நிலைய பாவனைக்கான கட்டணங்களை இரட்டிப்பாக உயர்த்துவதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


இப்பின்னணியில் வருடாந்தம் 26 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை எட்ட முடியும் என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தரப்பு விளக்கமளித்துள்ளது.

சர்வதேச விமானங்கள் தரையிறங்கல், தரித்திருத்தல் மற்றும் வான்பரப்பை பயன்படுத்தல், ராடார், பாதுகாப்பு நடவடிக்கைகள் என பல்வேறு நடவடிக்கைகளுக்கான கட்டணங்களை இரட்டிப்பாக்கினாலும் பிராந்தியத்தில் மிகக்குறைந்த கண்டணத்தை இலங்கையே அறவிடும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment