எதிர்கால கூட்டணி: மைத்ரி - மஹிந்த நேரடி பேச்சுவார்த்தை - sonakar.com

Post Top Ad

Sunday, 14 April 2019

எதிர்கால கூட்டணி: மைத்ரி - மஹிந்த நேரடி பேச்சுவார்த்தை


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - பொதுஜன பெரமுன இடையேயான எதிர்கால கூட்டணி நடவடிக்கைகள் தொடர்பில் இரு தரப்பு முக்கியஸ்தர்கள் இது வரை மூன்று கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதோடு நான்காம் கட்ட பேச்சுவார்த்தை மே மாதம் 9ம் திகதியளவில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், அதற்கு முன்பாக புதுவருடத்தையடுத்து மைத்ரி - மஹிந்த நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான ஆயத்தங்கள் இடம்பெறுவதாக சுதந்திரக் கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

பரந்த கூட்டணி ஊடாக ஆட்சியைக் கைப்பற்றும் எண்ணம் இரு தரப்பிலும் வெளியிடப்படும் அதேவேளை மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக ஏற்றுக்கொள்ள மஹிந்த அணியினர் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment