உளவுத் தகவல்கள் திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளது: ஜோன்! - sonakar.com

Post Top Ad

Monday, 22 April 2019

உளவுத் தகவல்கள் திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளது: ஜோன்!


நேற்றைய தாக்குதல்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற உளவுத்தகவல்கள் திட்டமிட்டே முடக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார் ஜோன் அமரதுங்க.தனது அமைச்சினால் நடவடிக்கையெடுத்திருக்கக்கூடிய விடயமாக இருந்தும் கூட கிடைக்கப் பெற்ற உளவுத்தகவலை அமைச்சுடன் பகிர்ந்து கொள்ளாது யாரோ தடுத்திருப்பதாகவும் ஜோன் மேலும் தெரிவிக்கிறார்.

நேற்று முதல் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள், இதே வகையிலான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருவதோடு உளவுத் தகவல்களை முறையாகப் பயன்படுத்தி நடவடிக்கையெடுக்க அரசு தவறியிருப்பதாகவும் தெரிவிக்கின்றமையும் தமது சார்பில் மன்னிப்பு கேட்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment