பேதமின்றி கடும் நடவடிக்கையெடுப்போம்: ரணில் - sonakar.com

Post Top Ad

Sunday, 21 April 2019

பேதமின்றி கடும் நடவடிக்கையெடுப்போம்: ரணில்


இன்றைய குண்டுத்தாக்குதல்களின் சூத்திரதாரிகளுக்கு எதிராக எவ்வித பேதமும் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவிக்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.


ஜனாதிபதி, சட்டமா அதிபருடன் ஆலோசனைகளை நடாத்தியுள்ள நிலையில் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சூத்திரதாரிகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரணில் தெரிவிக்கிறார்.

பெரும்பாலானவை தற்கொலைத் தாக்குதல்கள் என ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ள அதேவேளை இந்திய ஊடகங்கள் ஆரம்பத்தில் இருந்தே முஸ்லிம்களால் நடாத்தப்பட்ட தாக்குதல் என பிரச்சாரம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment