இரண்டாவது அணி தயார்: இலங்கைக்கு இந்திய உளவுத்துறை எச்சரிக்கை - sonakar.com

Post Top Ad

Tuesday, 23 April 2019

இரண்டாவது அணி தயார்: இலங்கைக்கு இந்திய உளவுத்துறை எச்சரிக்கை



கடந்த ஞாயிறு இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் தேசிய தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தொடர்புபடுத்தப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது அணியொன்று தாக்குதலுக்குத் தயாராக இருப்பதாக இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.


அபு உபைதா எனும் புனைப்பெயருடன் அறியப்படும் ஸஹ்ரான் ஹாஷிமின் உறவினர்கள் இருவர் கட்டாரில் இருந்து இலங்கை திரும்பியிருப்பதாகவும் குறித்த நபர்கள் தாக்குதல் திட்டம் தீட்டுவதாகவும் இந்திய உளவுத்துறை தகவல் அடிப்படையில் இச்செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கை அரசு இதுவரை உத்தியோகபூர்வமாக பெயர்களை வெளியிடவில்லையாயினும் தாக்குதல் நடந்து சில நிமிடங்களிலேயே இந்திய ஊடகங்கள் புகைப்படத்துடன் பிரதான தாக்குதல்தாரியின் பெயர் விபரத்தையும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்து.

No comments:

Post a Comment