முஸ்லிம் சமூகமும் 'கோபத்தில்' தவிக்கிறது: ரணில் - sonakar.com

Post Top Ad

Tuesday, 23 April 2019

முஸ்லிம் சமூகமும் 'கோபத்தில்' தவிக்கிறது: ரணில்


ஞாயிறு தினம் கொழும்பில் இடம்பெற்ற தாக்குதலில் அப்பாவி உயிர்கள் பலியானதில் ஏனைய மக்கள் போன்று முஸ்லிம் சமூகமும் கோபத்திலும் செய்வதறியாதும் தவிப்பதாக தெரிவிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.இன்றைய தினம் பிரதமர் நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் வைத்தே இவ்வாறு தெரிவித்த அவர், தேசிய தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவலையும் ஐ.எஸ்ஸின் உரிமை கோரலையும் விசாரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

அரச உயர்மட்டத்தில் காணப்படும் விரிசலின் விளைவால் உளவுத்தகவல்களைக் கொண்டு தாக்குதல்களை முறியடிக்க முடியாது போனதாக அரசியல் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment