மொத்தமாக 9 தற்கொலைதாரிகள் ; ஒருவர் பற்றி தொடர்ந்தும் விசாரணை: ருவன் - sonakar.com

Post Top Ad

Wednesday, 24 April 2019

மொத்தமாக 9 தற்கொலைதாரிகள் ; ஒருவர் பற்றி தொடர்ந்தும் விசாரணை: ருவன்


ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் மொத்தமாக 9 தற்கொலைதாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் அதில் எண்மரை அடையாளங்கண்டுள்ள அதேவேளை மேலும் ஒரு நபர் பற்றிய விசாரணைகள் தொடர்வதாகவும் தெரிவிக்கிறார் பாதுகாப்பு பிரதியமைச்சர் ருவன் விஜேவர்தன.அன்றைய தினம் தேவாலயங்கள் - நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட எட்டு இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றிருந்ததோடு தெமட்டகொட வீட்டில் இரு வெடிப்புகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சம்பவங்களில் ஒன்பது பேர் கொண்ட குழு ஈடுபட்டுள்ளதாக ருவன் தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ள அதேவேளை, தேசிய தவ்ஹீத் ஜமாத் எனும் பெயரில் இயங்கிய அமைப்பினர் ஐ.எஸ் தலைமைக்கு விசுவாசமாக உறுதிமொழியெடுக்கும் காணொளியும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நாட்டில் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு சோதனை நடவடிக்கைகள் தொடர்வதோடு இதுவரை 32 பேர் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ' உத்தியோகபூர்வமாக' தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment