பாணந்துறை வீட்டில் மேலும் சோதனை: பொருட்கள் மீட்பு! - sonakar.com

Post Top Ad

Monday, 22 April 2019

பாணந்துறை வீட்டில் மேலும் சோதனை: பொருட்கள் மீட்பு!


நேற்றைய தினம் கொழும்பு - நீர்கொழும்பு - மட்டக்களப்பு உட்பட்ட நகரங்களில் எட்டு இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.இப்பின்னணியில் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கருதப்படும் நபர்கள் பாணந்துறையில் வீடொன்றில் தற்காலிகமாகத் தங்கியிருந்தே அங்கு வந்ததாக கண்டறியப்பட்டுள்ளதுடன் போக்குவரத்துக்காகப் பயன்படுத்திய வேன் ஒன்றும் கைப்பற்றப்பட்டிருந்தது.

வீட்டை மேலும் சோதனையிட்ட பொலிசார் அங்கிருந்து வெடிகுண்டுகளில் இணைக்கும் சிறு இரும்புக் குண்டுககள் மற்றும் பெற்றரி போன்ற பொருட்களை மீட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். குறித்த நபர்கள் அங்கு தங்கியிருந்த வேளையில் பெண் மற்றும் குழந்தையொருவரும் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment