நாடு திரும்பினார் ஜனாதிபதி - sonakar.com

Post Top Ad

Monday, 22 April 2019

நாடு திரும்பினார் ஜனாதிபதி


File photo

தனிப்பட்ட விஜயம் நிமித்தம் இந்தியா - சிங்கப்பூர் சென்றிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, நள்ளிரவில் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு அமைச்சுகளைத் தம் வசம் வைத்திருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, முன் கூட்டியே கிடைக்கப்பெற்ற உளவுத் தகவல்கள் மற்றும் தாக்குதல் எச்சரிக்கைகளை அமைச்சரவைக்கு அறியத்தரவில்லையென குற்றச்சாட்டுகள் வெளியிடப்பட்டு வருகிறது.

இதேவேளை, ஏப்ரல் 11ம் திகதியிட்டு வெளியான தாக்குதல் எச்சரிக்கை பற்றிய ஆவணத்தின் உண்மைத்தன்மையை உறுதி செய்யும் விதமாக அமைச்சர் ஹரின் பெர்னான்டோ அதனை முழுமையாக வெளியிட்டுள்ளதுடன் தனது தந்தையூடாக தாக்குதல் பற்றி தானம் முன் கூட்டியே அறிந்து கொண்டதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment