பழிவாங்கல் பின்னணியில் பொய்த்தகவல் வழங்குவோருக்கு எதிராக நடவடிக்கை - sonakar.com

Post Top Ad

Tuesday, 30 April 2019

பழிவாங்கல் பின்னணியில் பொய்த்தகவல் வழங்குவோருக்கு எதிராக நடவடிக்கை


நாடளாவிய ரீதியில் சோதனை மற்றும் கைதுகள் தொடர்கின்ற நிலையில் பல இடங்களில் சொந்தப் பழிவாங்கலுக்காக தனி நபர்கள் மற்றும் சமூக சேவை நிறுவனங்கள் பற்றி பாதுகாப்பு படையினருக்கு தவறான தகவல்கள் வழங்கப்படுவது குறித்து தஃவா அமைப்புகள் சில அரசின் அவதானத்துக்குக் கொண்டுவந்துள்ளன.


இப்பின்னணியில், அனாமேதய தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வோர், தொலைநகல் ஊடாக தவறான தகவல் அனுப்புவோதைத் தேடிப்பிடித்து தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கான அறிவுறுத்தல்கள் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்படவுள்ளது.

இவ்வாறான பழிவாங்கல் நடவடிக்கைகள் குருநாகல், அக்குறணை, கண்டி, காத்தான்குடி மற்றும் வடபுலத்தின் சில இடங்களிலும் நடந்தேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment