நீதிமன்ற அழைப்பாணை கையளிப்பு: கோட்டாபே மறுப்பு - sonakar.com

Post Top Ad

Tuesday, 9 April 2019

நீதிமன்ற அழைப்பாணை கையளிப்பு: கோட்டாபே மறுப்பு


அமெரிக்காவில் கோட்டாபே ராஜபக்சவுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற அழைப்பாணை அவரிடமே நேரில் கையளிக்கப்பட்டுள்ளதாக லசந்தவின் மகள் தரப்பிலிருந்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


எனினும், அவ்வாறு எதுவும் தரப்படவில்லையென கோட்டாபே தரப்பு மறுப்பு வெளியிட்டுள்ளது.

தற்போது அமெரிக்கா சென்றுள்ள கோட்டாபே, கலிபோர்னியாவில் பல்பொருள் அங்காடியொன்றிற்குச் சென்றிருந்த நிலையில் அங்கு வைத்து அவரிடம் நீதிமன்ற அழைப்பாணை கையளிக்கப்பட்டுள்ளதாக அஹிம்சா விக்ரமதுங்க தரப்பிலிருந்து தகவல் வெளியிடப்பட்டுள்ளமையும் திருமண வைபவம் ஒன்றில் கலந்து கொள்ள கோட்டாபே தற்போது அமெரிக்கா சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment