
எதிர்வரும் இரு வாரங்களுக்குள் மாகந்துரே மதுஷை இலங்கைக்குக் கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கிறார் பிரதி சட்டமா அதிபர் திலீப பீரிஸ்.
டுபாயில் மாகந்துரே மதுஷோடு கைதான பலர் இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டுள்ள நிலையில் இலங்கையிலும் விசாரணைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். முக்கிய சந்தேக நபர்களான கஞ்சிபான இம்ரான் மற்றும் அமில சம்பத் ஆகியோரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், டுபாய் நிர்வாகத்துடன் பேசி இதற்கான ஏற்பாட்டைச் செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை உதயங்க வீரதுங்கவை இன்னும் மீள அழைத்து வர முடியாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment