ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சத்தமின்றி நடந்த புரட்சி: மஹிந்த தகவல்! - sonakar.com

Post Top Ad

Saturday, 20 April 2019

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சத்தமின்றி நடந்த புரட்சி: மஹிந்த தகவல்!


எதிர்க்கட்சிகளின் எந்தவித தலையீடும் இல்லாமல் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சத்தமின்றி தலைமைத்துவத்துக்கு எதிரான புரட்சியொன்று இடம்பெற்றதாக தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.எனினும், அது குறித்த தகவல்கள் விரைவாக வெளி வந்ததனால் அது தோல்வி கண்டுவிட்டதாகவும் இல்லாவிடின் தலைமைத்துவ மாற்றம் ஒன்று இடம்பெற்றிருக்கும் எனவும் மஹிந்த மேலும் தெரிவிக்கிறார்.

அண்மையில் சஜித் பிரேமதாச - ரவி கருணாநாயக்க மோதலில் ரணில் விக்கிரமசிங்கவே தொடர்ந்தும் கட்சித் தலைவராக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு வலுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment