சா'மருது: குடியிருப்பாளர்கள் தொடர்ந்தும் பாடசாலையில் தங்க வைப்பு - sonakar.com

Post Top Ad

Saturday, 27 April 2019

சா'மருது: குடியிருப்பாளர்கள் தொடர்ந்தும் பாடசாலையில் தங்க வைப்பு


சாய்ந்தமருது, வொலிவேரியன் சுனாமி வீட்டுத்திட்ட குடியிருப்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற சுற்றிவளைப்பு, குண்டுவெடிப்பு சம்பவங்களையடுத்து அப்பகுதி மக்கள் காரியப்பர் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.முழுமையான சோதனை நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் முடிந்த பின்னரே வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

காத்தான்குடி பகுதியிலிருந்து அங்கு வந்து குடியிருந்த நபர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தில் ஹிஜ்ரா பள்ளி நிர்வாகம் பொலிசாருக்குத் தகவல் வழங்கியிருந்தது. இப்பின்னணியில் நேற்றைய சுற்றிவளைப்பு இடம்பெற்றிருந்ததோடு அங்கு இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 06 சிறுவர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment