அவசியமின்றி இலங்கை செல்ல வேண்டாம்: UK அறிவுறுத்தல் - sonakar.com

Post Top Ad

Thursday, 25 April 2019

அவசியமின்றி இலங்கை செல்ல வேண்டாம்: UK அறிவுறுத்தல்ஐக்கிய இராச்சிய பிரஜைகள் அத்தியவாசிய தேவைகள் இருந்தாலொழிய இலங்கைக்கு செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது அந்நாட்டு அரசாங்கம்.கடந்த ஞாயிறு இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களில் 350க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் 500 பேர் வரை காயமுற்றுள்ளனர். இதில் இங்கிலாந்து உட்பட 11 நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளடங்குகின்றனர்.

இந்நிலையில், வார இறுதியில் அசம்பாவிதங்கள் நடக்கக் கூடும் எனும் எச்சரிக்கை அதிகரித்து வருவதுடன் அமெரிக்கா - ஐக்கிய இராச்சியம் தமது நாட்டு பிரஜைகளுக்கு அவதான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a comment