கல்முனை: பெண்கள் - குழந்தைகள் உட்பட 15 சடலங்கள் மீட்பு - sonakar.com

Post Top Ad

Saturday, 27 April 2019

கல்முனை: பெண்கள் - குழந்தைகள் உட்பட 15 சடலங்கள் மீட்பு


நேற்றிரவு கல்முனை, சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு படையினர் சோதனையிட முயற்சித்த போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து அங்கு விசேட அதிரடிப்படையினர் சுற்றி வளைப்பில் ஈடுபட்டிருந்தனர்.இப்பின்னணியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு மற்றும் தாக்குதல் சம்பவங்களில் 15 பேர் உயிரிழந்துள்ளமை இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. 06 சிறுவர்கள், 03 பெண்கள் மற்றும் ஆறு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் சோதனையிடச் சென்றிருந்த நிலையிலேயே வீடொன்றிலிருந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் பின் அங்கு பாரிய வெடிப்புச் சத்தங்கள் இடம்பெற்றதாகவும் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்சமயம் நிந்தவூர் உட்பட அண்டிய பிரதேசங்கள் அனைத்திலும் முழுமையான சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

இதில் 12 சடலங்கள் ஒரே வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் காயங்களுக்குள்ளான நிலையில் மீட்கப்பட்ட பெண்ணொருவரும் குழந்தையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a comment