ஐந்தாவது தடவையாக பதவியைப் பிடிக்கும் நெதன்யாஹு! - sonakar.com

Post Top Ad

Wednesday, 10 April 2019

ஐந்தாவது தடவையாக பதவியைப் பிடிக்கும் நெதன்யாஹு!


வேறு நாடுகளில் இரு தவணைகளுக்கு மேல் ஒருவர் ஆட்சியில் தொடர்வதை சகித்துக்கொள்ள மறுக்கின்ற அமெரிக்காவின் செல்லப்பிள்ளை இஸ்ரேலின் பிரதமராக ஐந்தாவது தடவை பதவியில் தொடர்கிறார் பென்ஜமின் நெதன்யாஹு.


கடும்போக்காளரான நெதன்யாஹு கூட்டணி ஊடாக பதவியில் தொடரவுள்ள அதேவேளை டொனால்ட் ட்ரம்ப் ஏலவே தொலைபேசியூடாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக்கும் நெதன்யாஹுவின் திட்டத்தை டொனால்ட் ட்ரம்ப் நிறைவேற்றி வைக்க உதவியுள்ள அதேவேளை ஏனைய நாடுகள் தற்சமயம் நிராகரித்துள்ளன. இந்நிலையில் கோலான் குன்றுகளையும் இஸ்ரேலுக்கே தாரைவாரர்க்க ட்ரம்ப் முயற்சிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment