அடுத்த ஜனாதிபதி என்னைப் போலிருக்க மாட்டார்: மைத்ரி எச்சரிக்கை! - sonakar.com

Post Top Ad

Thursday, 11 April 2019

அடுத்த ஜனாதிபதி என்னைப் போலிருக்க மாட்டார்: மைத்ரி எச்சரிக்கை!


இலங்கையில் இதுவரை பதவி வகித்துள்ள ஆறு ஜனாதிபதிகளுள் ஆகக்கூடுதலாக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டும், சேறு பூசப்படும் பாத்திரமும் தானே எனவும் தனக்குப் பின்னால் வரக்கூடியவர் இதையெல்லாம் தன்னைப் போன்று பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார் என தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.நேற்றைய தினம் இடம்பெற்ற ஜனாதிபதி ஊடக விருது விழாவில் வைத்தே இவ்வாறு தெரிவித்த ஜனாதிபதி, தனக்கு முன்னிருந்த யாரும் ஊடகங்களை கௌரவிக்க தயாராக இருக்கவில்லையெனவும் தனக்கு எதிராக இடம்பெறும் விடயங்களைப் போன்று தொடர்ந்தால் அடுத்த ஜனாதிபதியாக வருபவர் எத்தனை தூரம் பொறுத்துக் கொள்வார் என்பது சந்தேகமே எனவும் விளக்கமளித்துள்ளார்.

1970 - 1977 வரை லேக்ஹவுசுக்கான பொலன்நறுவ செய்தியாளராகப் பணியாற்றியதனால் ஊடகத்துறையில் பணியாற்றுபவர்களின் கஷ்டங்கள் தனக்கும் புரியும் எனவும் அதனாலேயே இவ்வாறான அரச அங்கீகாரத்தைப் பெற்றுத்தருவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment