சாதிக் இப்ராஹிமின் மேலும் ஒரு மனைவி சாய்ந்தமருதில் மரணம் - sonakar.com

Post Top Ad

Monday, 29 April 2019

சாதிக் இப்ராஹிமின் மேலும் ஒரு மனைவி சாய்ந்தமருதில் மரணம்மாவனல்லை புத்தர் சிலைகள் உடைப்பு விவகாரத்தில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபரான சாதிக் இப்ராஹிமின் மனைவியாக அடையாளங் காணப்பட்டுள்ள லத்தீபா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை குறித்த நபரின் மேலும் ஒரு மனைவி சாய்ந்தமருது சுற்றிவளைப்பில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.தம்மோடு மேலும் சுஹதாக்களின் மனைவியரும் சுற்றிவளைக்கப்பட்ட வீட்டில் இருப்பதாக சஹ்ரானின் சகோதரர்கள் தமது இறுதி நேர வீடியோவில் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அங்கிருந்து உயிர் தப்பிய பெண் சஹ்ரானின் மனைவியென பொலிசார் சந்தேகிக்கின்றமையும் காதியா என தவறான படத்தோடு பிரசுரப்படுத்தப்பட்டது குறித்த பெண்ணே எனவும் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment