50 விகாரைகளுக்கு தாக்குதல் அச்சுறுத்தல்: ஞானசார! - sonakar.com

Post Top Ad

Monday, 29 April 2019

50 விகாரைகளுக்கு தாக்குதல் அச்சுறுத்தல்: ஞானசார!


ஈஸ்டர் தாக்குதல்களையடுத்து 50 விகாரைகள் தாக்குதல் பட்டியலில் இருப்பதாகவும் இது தொடர்பில் தகவல் அறிந்து கொள்ள தன்னை சிறைச்சாலையில் வந்து சந்திக்கும்படியும் கூறிச் சென்றுள்ளார் ஞானசார.இன்றைய தினம் வழக்கு நிமித்தம் நீதிமன்றம் அழைத்துவரப்பட்டிருந்த ஞானசார, திரும்பிச் செல்கையிலேயே செய்தியாளர்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல்களைப் பற்றிக் கருத்துக் கூறுவதற்கு ஒன்றுமில்லையெனவும் விகாரைகள் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளதாகவும் ஞானசார தெரிவித்திருந்ததுடன் பொசன், வெசக் நிகழ்வுகள் அனைத்தையும் இரத்துச் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுவரை அறியப்பட்டிருந்த பெரும்பாலான தீவிரவாத கும்பல் முக்கியஸ்தர்கள் கைது செய்யப்பட்டு அல்லது உயிரிழந்துள்ள நிலையில் தொடர்ந்தும் தாக்குதல் அச்சுறுத்தல் நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment