பெரமுனவினர் கொலை செய்ய முயற்சி: அர்ஜுன - sonakar.com

Post Top Ad

Saturday, 13 April 2019

பெரமுனவினர் கொலை செய்ய முயற்சி: அர்ஜுன


தன்னைக் கொலைn சய்வதற்கு மஹிந்த அணியில் உள்ளவர்களே முயற்சி செய்ததாகவும் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார் அர்ஜுன ரணதுங்க.ஒக்டோபர் 26 அரசியல் பிரளயத்தைத் தொடர்ந்து அர்ஜுன மீது தாக்குதல் முயற்சி இடம்பெற்றிருந்த நிலையில் தனது மெய்ப்பாதுகாவலர் சரியான தருணத்தில் இயங்கியிருக்காவிட்டால் தான் இன்று உயிருடன் இருந்திருக்கப் போவதில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அன்றைய சம்பவத்தின் பின்னணியில் பெரமுனவினரே இருந்ததாகவும் தொடர்ந்தும் தனக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment