சமகாலச் சவாலாகும் வீதி விபத்துக்கள்! - sonakar.com

Post Top Ad

Thursday 18 April 2019

சமகாலச் சவாலாகும் வீதி விபத்துக்கள்!



இந்நாடு அரசியல் முதல் பொருளாதாரம் வரை பல்வேறு துறைகளில் சவால்களை எதிர்கொண்டு வருகிறது என்பதை வெளிப்படையாக அதானிக்க முடிகிறது. இந்நிலையில் இந்நாடு எதிர்நோக்கும் சமகாலச் சவால்களுக்குள் விபத்துக்களும் ஒன்றாக மாறியுள்ளது. இந்த விபத்துக்களினால்; விலைமதிக்க முடியாத மனித உயிர்;கள்; வீணாக உதிர்ந்து கொண்டிருக்கிறது.


உலகளாவிய ரீதியில் பல்வேறு காரணங்களினால் தினமும் உயிர்கள் உதிர்ந்து கொண்டிருக்கையில் நம் நாட்டில் விபத்துக்களினால்  உயிர்கள் உதிர்வது அண்மைக்காலமாக அதிகரித்திருப்பதை கடந்த சில நாட்களில் ஏற்பட்ட விபத்துச் சம்பவங்கள் எடுத்துக்காட்டாகவுள்ளன. 

சொல்வதைச் சொல்லுங்கள் செய்வதையே செய்வோம் என்ற கோட்பாட்டில் பலர் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதனால் பரிதாபங்களை  விலைகொடுத்து வாங்கிக்கொள்கிறார்கள். நிதானமிழந்த செயற்பாடுகளின் விளைவுகளினால்  அவர்கள் மாத்திரமின்றி பலரையும் பரிதாப நிலைக்குத் தள்ளிவிடுவதை தினமும் கண்டு கொள்ள முடிகிறது.  

குற்றங்களையும் குற்றச் செயல்களையும் தடுப்பதற்கும், நோய்களையும் நோய்களை ஏற்படுத்தும் ஏதுக்களைக் கட்டுப்படுத்துவதற்கும், விபத்துக்களையும், அவ்விபத்துக்களினால் ஏற்படும் பாதிப்புக்களை தடுப்பதற்கும,; கட்டுப்படுத்துவதற்கும் பல்வேறு;  வேலைத்திட்டங்களும் சட்ட ஏற்பாடுகளும் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டாலும், விழிப்புணர்வு செயற்பாடுகள்; முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் அவை வெற்றிபெறுவது அல்லது இலக்கை எட்டுவது என்பது இலங்கையைப் பொறுத்தவரை முயல்கொம்பு நிலையில் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. 

குற்றச் செயல்களும், டெங்குபோன்ற நோய்களும், வீதி விபத்துக்களும் தீர்ந்தபாடில்லை. அதனால,; ஆபத்துக்களும் பரிதாபகரமான உயிர் இழப்புக்களும் தொடர்;ந்த வண்ணம்தான் காணப்படுகின்றன. குறிப்பாக விபத்துக்களைத் தடுப்பதற்கான பல திட்டங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகிறது. அத்திட்டங்களின்பால் மக்களையும், வாகனம் செலுத்துபவர்களையும் அறிவூட்டுவதற்காக விழிப்புணர்வு விளம்பரங்களும், விழிப்புணர்வு நிகழ்;ச்சிகளும் ஊடகங்கள் வாயிலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சட்ட நடவடிக்கைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை எதிர்பார்க்கும் அளவுக்கு வெற்றிபெறவில்லை. விபத்துக்ளைக் குறைக்கவில்லை. 

விபத்துக்களும் இழப்புக்களும்

வீதி விபத்துக்களைத் தடுப்பதற்காக பல்வேறு செயற்றிட்டங்கள்; நடைமுறையில் உள்ளபோதிலும் கவனமின்றி பயணிப்பதனால், நிதானமிழந்து வாகனங்களை வேகமாகச் செலுத்துவதனால் தொடர்ச்சியாக பலரின் உயிர்கள்  பாதிப் பயணத்தில் பாதையில் பரிதாபகரமாக பிரிவதை ஜீரணிக்க முடியாதுள்ளது.

ஒவ்வொரு ஆத்தமாவும் மரணிப்பது நிச்சம். அம்மரணம் எந்தக் கோணத்தில்  அப்பிக்கொள்ளும் என்பதை யாரும் அறியார்;. வாழ்வியலின் இன்பத்துக்காக எதிர்கொள்ளும் போரட்டங்களுக்கு   எதிர்நீச்சலடித்து வாழ்க்கை வண்டியை ஓட்டிச் செல்லும் ஒவ்வொருவரும்  அவர்களது இறுதி மூச்சு நல்ல சகுணத்தில் முடிய வேண்டும் என்கின்ற அவாவைக் கொண்டிருக்கிறார்கள்.

அவ்வாறான அவாவோடு வாழும்போது, மரணமானது எதிர்பார்க்காத விதத்தில் கோரமாக சிலரை வந்தடைகிறது. சமகாலத்தில் கொலையென்றும், தற்கொலையென்றும், விபத்துக்கள் என்றும் இடம்பெறும் ஏற்றுக்கொள்ள முடியாத நிகழ்வுகளினால் பெறுமதிமிக்க உயிர்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன அல்லது பறியெடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. பெறுமதிமிக்க மனித வளம் இவ்வாறான காரணங்களினால் குறிப்பாக விபத்துக்களினால் தினமும் பறியெடுக்கப்படுவது தடுக்கப்படுவதும், தவிர்க்கப்படுவதும் அவசியமாகும். 

எதிர்கால கனவுகள் பலவற்றுடன் நிகழ்காலத்தை நகர்த்திச் செல்லும்  பாதசாரிகளும,; வாகனங்களில் பயணிப்போரும்,  வாகன சாரதிகளும் என பலதரப்பினர்  அன்றாடம் இடம்பெறும் வீதி விபத்துக்களுக்கு ஆளாகி   காயப்படுவதையும், அங்க உறுப்புக்களை இழந்து அங்கவீனமாகுவதையும், மீளப்பெற முடியாத இன்னுயிர்களை இழப்பதையும் காண்கின்றோம். 

கடந்த 11ஆம் திகதி முதல் இக்கட்டுரை பிரசுரத்திற்கு போகும் வரையான நாட்களில் வீதி விபத்துக்களினால் பலரின்; உயிர்கள் உதிர்ந்துள்ளன. 500க்கும் மேற்பட்டோர் விபத்துக்களில் சிக்கி காயப்பட்டு கொழும்பு தேசி வைத்தியசாலையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.. கடந்த வருடம் 2269 வீதி  விபத்துக்களில் 2368 பேர்  உயிர் இழந்துள்ளதுடன் 5711 பேர் படுகாயங்களுக்குள்ளானதுடன் 8483 பேர் சிறு காயங்களுக்கும் உள்ளானதாக  பொலிஸ்; தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், கடந்த 11ஆம் திகதி முதல்  மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்யும் விஷேட நடவடிக்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  கைது செய்யப்பட்டுளளனர். இவர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல்களும் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. 

இதேவேளை வீதி விபத்துக்கள் தொடர்பான தரவுகளை அவதானிக்கின்றபோது விபத்துக்கள் மிகவும் பாராதூரமானதாக உள்ளதுடன், வீதிவிபத்துக்களைக் கட்டுப்படுத்துவதற்கான அல்லது குறைப்பதற்கான நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்துவதாக மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எச்.ஆர் பசிந்து குறிப்பிட்டுள்ளதுடன் வீதி விபத்துக்கள் தேசிய பொருளாதாரத்திலும் தாக்கம் செலுத்துவதாகக் சுட்டிக்காட்டியுள்ளது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்துச் செயற்படுவது அவசியம் என்பது  வலியுறுத்தப்படுகிறது.

வீதி விபத்துக்களும் இளைஞர்களும்

நாட்டின் சனத்தொகையில் 15 முதல் 59 வயதுக்கிடைப்பட்டவர்களே அதிகமான எண்ணிக்கையை கொண்டவர்கள். தினமும் இடம்பெறும் வீதி விபத்துக்களில் அதிகளவு பாதிக்கப்படுகின்றவர்களாக உள்ளவர்கள் கட்டிளமைப் பருவத்தினரும் இளைஞர்களும் என்பது கவலைக்குரிய விடயமாகும். அண்மையில் மட்டக்களப்பு வந்தாரமூலையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் சிக்கி மூன்ற இளைஞர்கள் கருகி உயிர் இழந்தது முதல் நேற்று புதன் கிழமை 17ஆம் திகதி மஹியங்கனை பதுளை வீதியில்  வேனும் பஸ்ஸும் ஒன்றுடன் ஒன்று மோதி 10 பேர் உயிர் இழந்தது வரை வீதிவிபத்துக்களில் அதிகம் உயிர் இழப்பதும் காயங்களுக்குள்ளாவதும் இளைஞர்களாகவே உள்ளனர். 

கடந்த மூன்று தினங்களில் இடம்பெற்ற 19 மோட்டார் வாகன விபத்துக்களில் 20 பேர் உயிர் இழந்திருக்கிறார்கள் இவர்களில் அதிகளவிலானோர் இளைஞர்களாகும் என்பது இந்நாடு  எதிர்நோக்குகியிருக்கும் பெரும் சவாலாக உள்ள போதைப் பொருள் விடயத்துடன் வீதி விபத்துக்களும் அடங்கியிருப்பதை அடையாளப்படுத்துகின்றன. ஏனெனில், போதைப்பொருள் பாவவனை மற்றும் விற்பனையிலும் ஈடுபடுவவர்களில் அதிகளாவிலானோர் இளைஞர்களாக உள்ளதுடன் விபத்துக்களினால் பாதிக்கப்படுகின்றவர்களும் இளைஞர்களாகவே உள்ளனர். இக்காலப்பகுதியில்; மதுபோதைக்குள்ளான இளைஞர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களிலும் பலர் காயப்பட்டுள்ளதுடன் உயிர் இழந்துமுள்ளனர். 

இதில் திருகோணமலையில் ஒரு இளைஞம் மற்றுமொரு இளைஞனின் கழுத்தை வெட்டுவதும் வெட்டுப்பட்ட இளைஞன் தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஓடி அலைவதும்; அவ்விளைஞனை காப்பாற்ற முயற்சிக்காது சிலர் விலகிச் செல்லும்  காணொளிக்காட்சிகள் உள்ளத்தை உருக்குவதாக அமைவதுடன் மனிதாபிமானம் மரணித்து விட்டதா? என்ற கேள்வியையும் எழுப்பி நிற்கிறது.

இந்நிலையில் சுகாதார அமைச்சின் தொற்றா நோய் தடுப்புப் பிரிவின் தகவல்களின்; பிரகாரம் ஒவ்வொரு 10 நிமிடத்திலும் வீதி விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் அதனால் ஆறு அல்லது ஏழு பேர் பரிதாபகரமாக உயிர் இழப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு நிகழும் வீதி விபத்துக்களில் அதிகளவிலான ஆபத்துக்களை எதிர்நோக்குபவர்களாக இளைஞர்களாகவே உள்ளனர். 

கட்டிளமைப் பருவத்தின் உணர்வுக்கள் அதன் வழியே செயலுரு பெறுகின்றபோது நிதானமிழந்து வாகனங்களை செலுத்துவதானது வாழ்நாட்களில் மறக்க முடியாத பெரும் துன்பரமான அனுபவங்களை இவ்விபத்துக்களை எதிர்நோக்குகின்றவர்களும் அவர்களினது குடும்பத்தினரும் ஏற்படுத்துகின்றன. 

மூன்று தசாப்த காலமாக இடம்பெற்ற யுத்தத்தினால் உயிர் இழந்தவர்களை விடவும்  திடீர் விபத்துக்களினால் பலியானவர்களின் தொகை அதிகமென சுகாதாரத் தரப்பு சுட்டிக்காட்டுகின்றன. வருடத்திற்கு 37,000 பேர் வீதி விபத்துக்களினால் பாதிக்கப்படுவதாகவும் இதனால் நாளுக்கு நாள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது வருடந்தோரும் வீதி விபத்துக்களினால் சராசரி 3000பேர் உயிர் இழக்கின்றனர் என்பது இலங்கையின் மனித வளம் பரிதாபகரமாக இழக்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டுவதாகவே உணர முடிகிறது.

இந்நிலையில், வீதி விபத்துக்களினால் பாதிக்கப்படுகின்ற சிறார்களின் விபரங்களை அவதானிக்கின்றபோது  இலங்கையின் மனித வளம் ஆபத்தை எதிர்நோக்கி வருவதை எடுத்துக்காட்டுகிறது. வருடந்தோரும் விபத்துக்களினால் 600 சிறார்கள் இறப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. இவ்வாறு இலங்கையின் மனித வளத்தின் ஆரோக்கியமற்ற நிலையை விபத்துக்கள் உருவாக்கி வருவதானல் இந்நிலை இலங்கையின் பெருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தினமும் இடம்பெறு விபத்துக்களினால் பாதிக்கப்படுவோரின்; சிகிச்சைக்காக அரசாங்கம் பெறும் தொகைப் பணத்தை செலவு செய்கிறது. 

இந்நிலையில், வீதிப் போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் கணக்கெடுப்பின்படி, மோட்டர் சைக்கில், துவிச்சக்கர வண்டி, முச்சக்கர வண்டி, மோட்டார்கார், இரு தேவை – வான்,  லொரி மற்றும் தனியார் பஸ் ஆகிய வாகனங்களுடன் தொடர்புபட்ட விபத்துச் சம்பவங்களே அதிகம் ஏற்பட்டுள்ளன. 

இவ்விபத்துக்களுக்கான காரணங்களில் அதிக பங்காளிகளாக இருப்பவர்கள் சாரதிகளாகும். நாட்டில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்களுக்கு சாரதிகளின் பொறுப்பற்ற நடத்தை வீதி ஒழுங்கைப் பேணாமை, கவனயீனம்,  மதுபோதை,  அசவரமாக அதிக வேகத்துடன்; வாகனம் செலுத்துதுதல் என்பன பிரதானமாகவுள்ளன. 

அவை தவிர, வீதி ஒழுங்கு தொடர்பான அறிவின்மை, வீதியின் தன்மை, நிலைமையை அறியாமை, காலநிலையின் தன்மையினைத் தெரிந்து கொள்ளாமை, வாகனத்தின் சாதக, பாதக நிலையைக் கண்டுகொள்ளாமை மற்றும் அவற்றைப் பரீட்சிக்காமை, மனித தவறுகள், மனப்போரட்டம் மற்றும் மன அழுத்தத்துடன் வானம் செலுத்துதல், வீதியில் நடத்தல், வீதிப் புனரமைப்பின் நிலையை தெரிந்து கொள்ளாமை, திட்டமிடப்படாத பிரயாணத்தை மேற்கொள்ளல்;, சாரதிகள்; குறைந்த ஆரோக்கியத்துடன் வாகனத்தைச் செலுத்துதல்;, வானம் செலுத்துவதற்கான திறன் மற்றும் முறையான பயிற்சியின்றி வாகனத்தை ஓட்டுதல், வாகனத்தின் வலுவை பரிசோதிக்காமை, பாதுகாப்பு ஆசனப்பட்டியை அணியாமை, வீதிச் சமிஞ்சைகளை கவனத்திற்கொள்ளாமை, பாதசாரிகளையும் குடிமக்களையும் கவனத்திற்கொள்ளாமை, வீதிச் சட்டங்களை மதிக்காது வாகனங்களைச் செலுத்துதல், தூரங்களைக் கவனத்ததிற்கொள்ளமை, சட்ட நடவடிக்கைகளில் உள்ள வலுக்கள,; பாதசாரிகள் வீதி ஒழுங்குகளை சரியாகப் பேணி வீதிகளில் செல்லாமை போன்ற பல்வேறு காரணங்களாலும் வீதி விபத்துக்கள் நடந்தேறுகின்றன. 

சட்டமும் பாய்ச்சலும்

சனத்தொகையின் பெருக்கத்திற்கேற்ப தேவைகளும் அதிகரித்துள்ளன. குறிப்பாக மனித வாழ்வில்  போக்குவரத்து  இன்றியமையாததொன்று. அப்போக்குவரத்து இன்று அதிக முக்கியமானதாகவும் விரைவானதாகவும் மாறிக்கொண்டு வருகிறது. குறுகிய நேரத்துக்குள் குறித்த இடத்தை அடைந்துகொள்வதற்கான எத்தகைய மார்க்கங்கள் இருக்கிறதோ அவற்றையே இன்று ஒவ்வொரு வாகன சாரதியும் வாகன உரிமையாளர்களும் விரும்புகின்றனர். கடந்த 15ஆம் திகதி தெற்கு அதி வேக நெடுங்சாலையில் ஏற்பட்ட வீதிவிபத்தில் 9 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் சாரதிகளின் அவசரம், வேகமான பயனம் வீதி ஒழுங்கைப் முறையாகப் பேணாமை என்பவற்றைப் பறைசாட்டுகின்றன.

கடந்த அரசாங்கத்தின் இலஞ்சம் ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் கடந்த அரசாங்கம் மேற்கொண்ட அபிவிருத்திப்பணிகளில் வீதி அபிவிருத்தி முக்கியமானதாகும். பல நீண்ட தூரப் பிரதேசங்களுக்கான வீதிக் கட்டமைப்புக்கள் அபிவிருத்தி செய்யப்பட்டன. இவற்றில் .தெற்கு அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கொழும்பு கட்டுநாயக்க அதி வேக நெடுஞ்சாலை முக்கியமானதாகும். 

சாதாரண பாதைகளினூடாக பயணிப்பதிலும் பார்க்க நேரச் சுருக்கத்துடன் வேகமாகப் பயணிப்பதையே பலர் விரும்புவதைக் காண்கின்றோம். கடந்த 14 மற்றும் 15ஆம் திகதிகளில் இந்நெடுஞ்சாலைகளினூடக ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில்தான் அவசரத்தின் அவதானமின்மையினால் இவ்வீதிகளினூடாகவும் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. 

போக்குவரத்து தேவைகள் அதிகரித்ததன் காரணமாக பாதைகளில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டன. முன்னொரு காலத்தில் குறிப்பாக கிராமங்களில் மாட்டு வண்டில்களும் துவிச்சக்கர வண்டிகளுமே போக்குவரத்துக்கான வாகனங்களாக வீடுகளில் இருந்தன. ஆனால,; இன்று ஒரு வீட்டில் 5 பேர் இருந்தால் 5 மோட்டர் சைக்கில்கள் இருப்பதைக் காண முடிகிறது. கிராமங்களில் இத்தகைய நிலையென்றால் நகர் புறங்களில் எவ்வாறு இருக்கும் என்பதைச்  சுட்டிக்காட்டவேண்டிதில்லை.

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தில். நாளாந்தம் ஏறக்குறைய 2000க்கும் அதிகமான வாகனங்கள் புதிதாகப்; பதிவு செய்யப்படுவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. இலங்கiயில் ஏறக்குறைய 7.1 மில்லியன் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 5.2 மில்லியன் வாகனங்கள் வீதிகளில் செலுத்துப்படுவதாகவும் வானப்; போக்குவரத்து திணைக்களத்தின் வாகனங்கள் தொடர்பான தகவல்கள் புலப்படுத்துகிறது. 

இவ்வாறு பதிவு செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையின் அதிகரிப்பானது போக்குவரத்துத் தேவையின் அதிகரிப்பைச் சுட்டிக்காட்டுகிறது. ஆனால,; போக்குவரத்து மற்றும் வீதி ஒழுங்கு நடைமுறைகள் தொடர்பான விழிப்புணர்பூட்டல் நடவடிக்கைகள் நகர மட்டம் முதல் கிராம மட்;டம் வரை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் அதிகரிக்கப்பட்டுள்ளதா? அதுமாத்திரமின்றி, சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்கள் அவற்றை சரியாகவும் நீதியாகவும் நடைமுறைப்படுத்துகின்றனரா? என்பது கேள்விக் குறியாகும்.

வீதி விபத்துக்களை ஏற்படுத்துகின்ற கண்டறியப்பட்டுள்ள காரணங்கள் தொடர்பாக அக்காரணங்களினால் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்க்கும் பொருட்டும், சரியான முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட பொறிமுறையினுடனான விழிப்பூணர்வூட்டல் நடவடிக்கைகள் கிராம மட்டம் முதல் நகர மட்டம் வரை  அதிகரிக்கப்படுவயதோடு சட்டத்தின் பாய்ச்சலும் கடுமைக்கப்படுவது  அவசியமாகவுள்ளது. 

ஒவ்வொரு காரணம் தொடர்பிலும் ஒழுங்கமைக்கப்பட்ட புரிதல்மிக்கதான விழிப்புணர்வூட்டல்  நடவடிக்கைகள்  கிராமப் புறங்களிலும் நகரப் புறங்களிலும் மேற்கொள்ளப்படுவது காலத்தின் தேவை. அதன் முக்கியத்துவம் அதற்குப் பொறுப்பானாவர்களினால் உணரப்படுவதும் முக்கியமாகும். 

இந்த வகையில், தற்போது அதிகரித்துள்ள வீதி விபத்துக்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ள அல்லது அதிகரிக்கும் காலத்தில் மாத்திரமல்லாது தொடர்ச்சியாக அவை முன்னெடுக்கப்பட வேண்டும். வீதி விபத்துக்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளும், விழிப்புணர்வூட்டல் செயற்பாடுகளும் அதிகரிக்கப்பட வேண்டும் அப்போதுதான் நாட்டினதும் சமூகத்தினதும் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் மனிதவளத்தைப் பாதுகாக்கவும் பொருளாதார இழப்பைத் தவிர்க்கவும் முடியும்.

அந்தவகையில், வீதிப் போக்குவரத்துப் பாதுகாப்பு தொடர்பில் வீதிப் போக்குவரத்துச் சட்டத்திற்குச் சகல வீதிப் பாவனையளர்களும் மதிப்பளிப்பதோடு, அவற்றைத் தவறாது பின்பற்றுவதோடு பயணங்களின் போது அவதானமும் கவனமும் அவசியமாகவுள்ளது. கவனமாகப் பயணங்களை மேற்கொள்ளாததனால்தான் பரிதாபகரமான விபத்துக்களைச்; சந்திக்க நேரிடுகிறது. வீதிப் பாதுகாப்பு தொடர்பில் சிறு பாலகர்கள், கனிஷ்ட, சிரேஷ்ட பாடசாலை மாணவர்கள், வளர்ந்தவர்;கள் மற்றும் முதியோர் தொடர்ச்சியாக அறிவூட்டப்படுவது அவசியமாகும். 

இலங்கை எதிர்நோக்கும் சமகாலச் சவால்களுக்குள் ஒன்றாக மாறியுள்ள விபத்துக்களின் பாதிப்பைக் குறைக்க தொடர்ச்சியான விழிப்பூட்டல்களுக்கு சாரதிகள் உட்படுத்தப்படுவதோடு, போக்குவரத்துச் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள சட்டங்கள் பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்தப்படுவதும் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற அதிகாரிகள் மேலதிக அதிகாரிகளினால் கண்காணிப்புக்குட்படுத்தப்படுவதும் அவசியமாகும். அப்போதுதான், வீதி விபத்துக்களால் அப்பாவி உயிர்கள் பரிதாபகரமாக இழக்கப்படுவதையும் தேசிய, குடும்ப பொருளாதாரத்தில் ஏற்படுகின்ற பாதிப்புக்களையும் தவிர்த்துக்கொள்ள முடியும். 

-எம்.எம்.ஏ.ஸமட்.

No comments:

Post a Comment