சபரகமுவயில் மருத்துவபீடம்: சவுதியிடமிருந்து 8.7 பில்லியன் ரூபா நிதியுதவி - sonakar.com

Post Top Ad

Thursday, 18 April 2019

சபரகமுவயில் மருத்துவபீடம்: சவுதியிடமிருந்து 8.7 பில்லியன் ரூபா நிதியுதவி


சபரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் அமைப்பதற்கு சவுதி அரேபியாவிடமிருந்து 8.7 பில்லியன் ரூபா நிதியுதவி வழங்கப்படவுள்ளது.சவுதி சென்றிருந்த நிதியமைச்சரின் செயலாளர் அடங்கிய விசேட பிரதிநிதிகள் குழு இதற்கான இணக்கப்பாட்டை எட்டியுள்ள நிலையில் சபரகமுவ பல்கலையில் மருத்துவ பீடம் இல்லாத குறை நீக்கப்படுவதுடன் முழுஅளவிலான நவீன மருத்துவபீடம் கட்டியெழுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2016 பிட்ச் அறிக்கையின் படி இலங்கையில் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதாசாரத்திலேயே மருத்துவர்கள் இருப்பதாகவும் அக்குறைபாட்டைத் தீர்ப்பதற்கு மேலும் மருத்துவர்கள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment