பள்ளிவாசல்கள் வழமை போல் இயங்கும்: ஆளுனர் அசாத்! - sonakar.com

Post Top Ad

Thursday, 25 April 2019

பள்ளிவாசல்கள் வழமை போல் இயங்கும்: ஆளுனர் அசாத்!


சியாரங்களுடனான பள்ளிவாசல்கள் ஐ.எஸ் ஆதரவு உள்நாட்டு அமைப்பினரின் தாக்குதலுக்குள்ளாகக் கூடும் எனும் ஊர்ஜிதப்படுத்தப்படாத பொலிஸ் எச்சரிக்கை ஆவணம் ஒன்று சமூக வலைத்தளங்களில் உலவி வருகிறது. எனினும், இது தொடர்பில் எவ்வித அச்சமும் தேவையில்லையென தெரிவிக்கிறார் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி.


நாளை வெள்ளிக்கிழமை உட்பட அனைத்து பள்ளிவாசல்களிலும் வழமை போன்று தொழுகைகள் இடம்பெறும் எனவும் பொலிஸ், இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்புடன் பள்ளி நிர்வாகங்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் பொது மக்கள் இது தொடர்பில் அச்சப்படத் தேவையில்லையெனவும் இது தொடர்பில் சோனகர்.கொம் வினவியபோது ஆளுனர் விளக்கமளித்திருந்தார்.

சியாரங்களுடனான பள்ளிவாசல்களை விபரிக்க தவ்ஹீத் கொள்கைவாதிகள் உபயோகிக்கும் வார்த்தைப் பிரயோகங்களுடன் பொலிஸ் மா அதிபர் அலுவலக கடிதத் தலைப்பில் குறித்த எச்சரிக்கை கடிதம் வெளியிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment