பிக்குகளை நீதிமன்றில் நிறுத்துவதில் விருப்பமில்லை: தலதா - sonakar.com

Post Top Ad

Wednesday 10 April 2019

பிக்குகளை நீதிமன்றில் நிறுத்துவதில் விருப்பமில்லை: தலதா


பௌத்த பிக்குகள் நீதிமன்றங்களில் நிறுத்தப்படுவதைத் தான் விரும்பவில்லையென தெரிவிக்கிறார் நீதியமைச்சர் தலதா அத்துகோறள.


பௌத்த பிக்குகளின் குற்றச்செயல்களை விசாரிக்க தனியான நீதிமன்றம் அமைக்கப்படுவது கூட தனக்கு விருப்பமில்லையென தெரிவிக்கும் அவர் பௌத்த துறவிகள் நாட்டின் பிரதான குற்றச் சட்டங்களின் பின்னணியில் விசாரிக்கப்படுவதிலும் தனக்கு உடன்பாடில்லையென தெரிவிக்கிறார்.

பௌத்த மதத்துக்கான முன்னுரிமையுள்ள இலங்கை அரசியல் யாப்பினைப் பயன்படுத்தி அவ்வப்போது ஞானசார போன்ற பேரினவாதிகள் சிறுபான்மை சமூகங்களை பாரிய மன உளைச்சலுக்குள்ளாக்குவதோடு இனவன்முறைகளைத் தூண்டியுள்ள போதிலும் இலங்கையில் இதுவரை இவ்வாறான செயல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லையென்பதும் நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியிலேயே ஞானசார தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் வைத்து பராமரிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

1 comment:

Sano said...

we have a such a foolish justice minister. then how to implement the law equally for all the citizen of the country.

Post a Comment