வரலாற்றில் முதற் தடவையாக படம் பிடிக்கப்பட்டுள்ள "கருந்துளை" (Black Hole) - sonakar.com

Post Top Ad

Wednesday, 10 April 2019

வரலாற்றில் முதற் தடவையாக படம் பிடிக்கப்பட்டுள்ள "கருந்துளை" (Black Hole)


உலக வரலாற்றில் முதன் முறையாக "கருந்துளை" (Black Hole)  யின் படம் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது.


எமது பால்வழி (Milkyway Galaxy)  இலிருந்து மிகவும் தொலைவிலுள்ள M87-Galaxy  எனப்படும் விண்மீன் மண்டலத்தில்  அமைந்துள்ள ஒரு கருந்துளையின் படத்தை முதன் முறையாக  வானியலாளர்கள் எடுத்துள்ளனர்.

இக் கருந்துளை பூமியைப் விட மூன்று மில்லியன் மடங்கு பெரிதானதும் 400 பில்லியன் கிலோ மீட்டர் விட்டத்தையும் கொண்டது. மேலும் இது 500 மில்லியன் திரில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.அதே நேரம் இது எமது முழு சூரிய குடும்பத்தின் அளவைக் காட்டிலும் பெரியது.சூரியனை விட 6.5 பில்லியன் மடங்கு திணிவுடையது. இந்தப் படம் உலகின் பல திசைகளில் இருக்கும் எட்டு தொலைநோக்கிகளின் வலைப்பின்னல் அமைப்பு மூலம் எடுக்கப்பட்டுள்ளது.

நன்றி :BBC 
தமிழில்: ஹரீஸ் ஸாலிஹ் 

1 comment:

Unknown said...

இதில் அப்படி ஒரு விஷயமும் பெரிதாக இல்லையே. சூரா வாஹிஆவின் வசனங்கள் 75,76 இதைத்தானே சொல்கிறது என்ற பெரிய கண்டுபிடிப்புடன் 1439 ஆண்டுகளாக தூங்கிக்கிடந்த நம்ம ஆள் வந்து இந்த விஞ்ஞானிகளை கொச்சைப்படுத்துவது மாத்திரமல்ல இஸ்லாத்துக்கு ஆள சேர்க்க இந்த logicகை பயன்படுத்தி விஞ்ஞானிகளுக்கெல்லாம் விஞ்ஞானியாக தங்களை கற்பனை செய்வார்கள். இந்த தாயிக்கள் எப்போது எதையாவது கண்டுபிடிப்பது? முயற்சியுங்கள் இந்த காபீர்கள் சவர்க்க, நகரத்தின் இருப்பிடங்களை கண்டுபிடிக்க முன் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள் பார்க்கலாம்.

Post a Comment