புத்தளத்தில் கைதான இளைஞர்களுள் இருவர் விடுவிப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday, 10 April 2019

புத்தளத்தில் கைதான இளைஞர்களுள் இருவர் விடுவிப்பு

RjaFkbt

புத்தளம், வனாத்த வில்லு பகுதி தோட்டம் ஒன்றில் வெடிபொருட்களுடன் கைதான இளைஞர்களுள் இருவர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.


மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தின் பின்னணியில், தலைமறைவாக இருந்த பிரதான சந்தேக நபர் அங்கு ஒளிந்திருப்பதாகக் கிடைக்கப்பெற்ற தகவலின் பின்னணியில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும், எதிர்பாராத வகையில் அங்கிருந்து வெடிபொருட்கள் மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டிருந்த நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் சில இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், நப்ரித் மற்றும் நவீத் ஆகிய இரு இளைஞர்களிடம் விசாரணைகள் முடிவுற்றுள்ளதாக பொலிசார் நீதிமன்றில் தெரிவித்திருந்ததன் அடிப்படையில் குறித்த இருவரையும் விடுவிக்க முன் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி அதற்கான அனுமதியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment